விபத்து..

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இன்று (31.07.2021) மாலை 4.30 மணியளவில் கனரக லொறி மற்றும் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில்,

காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் ஒருவர் மாத்திரம் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் பத்தனை பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லொறி ஒன்றுமே கொட்டகலை சுரங்க பாதை பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்துடன் தொடர்புடைய லொறி, முச்சக்கரவண்டி ஆகியன பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





