வவுனியாவில் ஐந்தாவது நாளாக இன்றும் 6 இடங்களில் 7200 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!!

2351

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் 6 இடங்களில் 7200 பேருக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், காமினி மகா வித்தியாலயம், நொச்சிமோட்டை கனிஷ்ர மகா வித்தியாலயம், சிதம்பரபுரம் நகராஜா வித்தியாலயம், ஒமந்தை பகுதி என வவுனியா மாவட்டத்தில் 6 இடங்களில் இன்று (02.08.2021) தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான பணியில் வைத்தியர்களான பிரசன்னா, அரங்கன், பிரதீபன், துஸ்யந்தன், அருள்மூழி, யூட் பீரிஸ் ஆகியவர்கள் கடமையில் ஈடுபடவுள்ளமையுடன் 30 வயது தொடக்கம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.