வவுனியாவில் 4 நாட்களில் 15 நிலையங்களில் 41,000 சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றிவைப்பு!!

2180

தடுப்பூசிகள்..

வவுனியா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 15 சேவை நிலையங்கள் ஊடாக 41,000க்கு அதிகமான மக்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திற்கு 75,000 தடுப்பூசிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு கடந்த புதன்கிழமை (28.07.2021) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.

28,29,30,31 ஆகிய நான்கு நாட்களில் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 15 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டு 41,000 க்கு அதிகமான மக்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றி வைக்கப்பட்டுள்ளதுடன் என்னும் 34,000 மக்களுக்குறிய தடுப்பூசிகள் காணப்படுவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த தடுப்பூசிகள் நிறைவடையும் தருவாயில் மேலும் தடுப்பூசிகளை பெற்று மக்களுக்கு வழங்குவதற்குறிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.