ஹட்ரிக் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி?

459

SL

20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென்னாபிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தென்னாபிரிக்கா தொடக்க போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. 2வது போட்டியில் நியூசிலாந்தை வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் ஸ்டெய்னின் அபாரமான பந்துவீச்சால் 2 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் பலவீனமான நெதர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பெற தென்னாபிரிக்காவுக்கு வாய்ப்பு உள்ளது. நெதர்லாந்து அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையிடம் 39 ஓட்டங்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

இரவு 7 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியில் இலங்கையிடம் தோற்றால் இங்கிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து விடும்.

இலங்கை அணி தொடக்க போட்டியில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது. 2வது போட்டியில் நெதர்லாந்தை அபாரமாக தோற்கடித்தது. இன்றைய போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஹட்ரிக் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் களமிறங்கவுள்ளது.