வவுனியாவில் முதலாவது தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு நாளை இரண்டாவது தடுப்பூசி!!

2467

இரண்டாவது தடுப்பூசி..

வவுனியாவில் முதலாவது தடுப்பூசியினை பெற்று இரண்டாவது தடுப்பூசிக்காக காத்திருப்போர்கள் நாளையதினம் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நாளை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதுடன்,

காலை 8.30 – மதியம் 1.00 வரை மணி வரையிலான காலப்பகுதியில் வைரவபுளியங்குளம் மற்றும் வவுனியா நகரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்டோருக்கும்,

மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் வவுனியா நகரம், வடக்கு மற்றும் இறப்பை கல்குளம் கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

மேலும் குறித்த தடுப்பூசி வழங்குவது இணையத்தில் பதிவு மேற்கொள்வதனால் நேரக்கட்டுப்பாடு முக்கியம் என்பதுடன் கிளினிக் புத்தகம், தடுப்பூசி அட்டை, குடும்ப அட்டை, அடையாள அட்டை என்பன முக்கியம் எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.