சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2014 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை!!

716

Chennai-Super-Kings-vs-Rajasthan-Royals6ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளை 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு உச்ச நீதிமன்று தடைவிதித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையிலான குழு ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தியது.

தனது அறிக்கையை அந்த குழு பெப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெளரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளை இம்முறை நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்த இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்று நாளை பிறப்பிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கர் அல்லது கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணை முடியும் வரை இடைக்கால தலைவர் பதவியில் கவாஸ்கர் இருப்பார்.