வவுனியாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று!!

1727

கொரோனா..

வவுனியாவில் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (09.08.2021) வெளியாகின.

அதில் பாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், பொலிஸார் இருவருக்கும், மதவாச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், அம்பேபுவே பகுதியில் ஒருவருக்கும்,

கல்மடு பகுதியில் இருவருக்கும், கல்குண்டாமடு பகுதியில் ஐவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் நால்வருக்கும்,

சண்முகபுரம் பகுதியில் ஒருவருக்கும், நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், மெனிக்பாம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும் என 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 18 தொற்றாளர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று அச்சம் காணப்படுவதாக தாமாகவே வைத்தியசாலைக்கு சென்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்களாவர்கள்.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.