வவுனியா நகர் முழுவதும் ”கொத்தலாவல பிரேணையை சுருட்டிக்கொள்” என சுவரொட்டிகள்!!

1132

சுவரொட்டிகள்..

வவுனியா நகரின் பல பகுதிகளில் இலவசக் கல்வியை சீரழிப்பதற்கான மிலிட்டரி பொறியமைப்பினை வகுக்கின்ற கொத்தலாவல பிரேணையை சுருட்டிக்கொள் என்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டிகளின் கீழ்ப் பகுதியில் கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலையம் எனவும் உரிமம் கோரப்பட்டுள்ளதுடன் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரின் குறிப்பாக நூலக வீதி, ஏ9 வீதி, புகையிரத நிலைய வீதி, மன்னார் வீதி, நகர் மத்தி, ஹொரவப்பொத்தானை வீதி ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.