இலங்கையை முடக்க தயாராகும் அரசாங்கம் : நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்!!

1600

இலங்கையை முடக்க தயாராகும் அரசாங்கம்?

எதிர்வரும் ஓரிரு நாட்களின் நிலைமைக்கமைய இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

சில நாட்களுக்கு நாட்டை முடக்க நேரிடலாம் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய நாட்டை முடக்கி வைப்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தொற்று நோயின் போது மக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிறிது காலம் நாட்டை முடக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-