ஒருவரை கொலை செய்த 10 பேருக்கு மரண தண்டனை!!

568

Courtகொலை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மத்திய மாகாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

10 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

மாத்தளை, இறத்தோட்டை பிரதேசத்தில் 2004 ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்ற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கொலை சம்பவத்துடன் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.