நடமாடும் தடுப்பூசி சேவை..

வவுனியா மாவட்டத்தில் நோய்வாய்ப்பட்டு வீடுகளைவிட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையினை வவுனியா சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் நோய்வாய்பட்டு, வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவது சிக்கலாக உள்ளது. அதனையடுத்து நடமாடும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலிலும் நடமாடும் தடுப்பூசி செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே நோய்வாய்ப்பட்டு வீடுகளை விட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்கள் நடமாடும்,

தடுப்பூசி சேவையை பெற்றுக்கொள்வதற்கு 0242 222761 என்ற வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இலக்கம் அல்லது 0242 222 323 என்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகிய இலக்கத்திற்கு தொடர்புகளை ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





