யாழ் பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

1553

யாழ் பண்ணை கடலில்..

பண்ணைக் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றும் இளைஞன் பண்ணைப் பாலத்திலிருந்து செல்ஃபி எடுக்க முயன்ற நிலையில் கால் தவறி கடலில் விழுந்து மரணமடைந்தார்.

பின்னர் அவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகாதாரப் பிரிவினர் சடலத்தைப் பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.