வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வீதிகளில் செல்வோர்களை மறித்து பி.சீ.ஆர் பரிசோதனை!!

2393

பி.சீ.ஆர் பரிசோதனை..

வவுனியா மாவட்டத்தில் ஒரேநாளில் இராணுவத்தினர் மற்றும் வைத்தியர்கள் உட்பட 76 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் நாட்டில் 229 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களை இணங்கண்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இன்று (11.08.2021) காலை எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வீதியில் அத்தியாவசிய தேவையின்றி பயணிப்போர், சீரான முறையில் முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார முறைகளை பின்பற்றாதவர்கள்,

பேரூந்தில் சமூக இடைவெளியின்றி பயணித்தோர் என 200க்கு மேற்பட்டவர்களை சுகாதார பிரிவினர் வழிமறித்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.