வவுனியாவில் 84 பேருக்கு கொரோனா தொற்று : மக்களே அவதானம்!!

3309

வவுனியாவில்..

வவுனியாவில் 84 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (12.08.2021) வெளியாகின.

அதில் நெளுக்குளம் பகுதியில் இருவருக்கும், சிறிநகர் பகுதியில் நான்கு பேருக்கும், அண்ணாநகர் பகுதியில் ஒருவருக்கும், அவுசலப்பிட்டிய பகுதியில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் நான்கு பேருக்கும், சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருவருக்கும்,

நேரியகுளம் பகுதியில் இருவருக்கும், சின்னப்புதுக்குளம் பகுதியில் இருவருக்கும், கனகராயன்குளம் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும், இராசேந்திரங்குளம் பகுதியில் இருவருக்கும்,

தம்பனைபுளியங்குளம் பகுதியில் ஏழு பேருக்கும், கல்மடு பகுதியில் ஏழு பேருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், ஓமேகா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கும், கல்குண்ணாமடு பகுதியில் ஒருவருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியில் மூன்று பேருக்கும்,

சாந்தசோலை பகுதியில் மூன்று பேருக்கும், சிறைச்சாலை கைதிகள் ஐந்து பேருக்கும், சுகாதார திணைக்கள விடுதியில் மூன்று பேருக்கும், வவுனியா இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருககும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், நெல்வேலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் ஒருவருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பதின்மூன்று பேருக்கும்,

போகவ்வெவ பகுதியில் ஒருவருக்கும், தாலிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும் என 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.