தடைகளை தகர்த்து சாதனை படைத்த குள்ளப்பெண்!!(வீடியோ)

592

அமெரிக்காவில் நடைபெற்ற பெண்களுக்கான உடற்கட்டு அழகு போட்டியில் குள்ளப்பெண் ஒருவர் பங்கேற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்த அமண்டா லாய்(22) என்பவர் 4 அடி உயரமும் 72 பவுண்ட் எடையும் கொண்டவர்.

(hypochondroplasia) என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட அமண்டா ஸ்காட்டேல் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் பெண்களுக்கான உடற்கட்டு போட்டியில் பங்கேற்று 4வது இடத்தை பிடித்ததுடன், கிண்ணத்தையும் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாய் உடற்கட்டு அழகு பயிற்சியில் ஆர்வம் காட்டி வரும் இவர் சுமார் 6 மாத காலமாக தீவிரப்பயிற்சியில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தன் வெற்றியை குறித்து அமண்டா கூறுகையில், உங்களை நீங்களே உற்றுநோக்கி உணர்ந்தால் எதுவும் பெரிய விடயம் இல்லை என்றும் எதிலும் சிறந்து விளங்க முக்கியமாக முதலில் அர்ப்பணிப்பு வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உடற்கட்டு அழகு போட்டியில் பரிசு வென்ற முதல் குள்ளமான பெண் என்ற புகழ் இவரையே சாரும்.

K1 K2 K3