வவுனியா நகரசபை விளையாட்டு மைதானம் கொரோனா அச்சம் காரணமாக மறுஅறிவித்தல் வரை பூட்டு!!

1653

கொரோனா அச்சம்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக இன்று (12.08.2021) மாலை தொடக்கம் அமுலாகும் வகையில் மறுஅறிவித்தல் வரை நகரசபை விளையாட்டு மைதானம் தற்காலிகமாக மூடப்படுவதுடன் நடைப்பயிற்சிக்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

அத்துடன் மேலும் வவுனியா நகரசபையின் உடல் வலுவூட்டல் நிலையமும் இன்று மாலை தொடக்கம் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒர் வாரத்தினுள் 300க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 5 மரணங்கள் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.