
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான T20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 89 ஓட்டங்களையும் டில்ஷான் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 19.2 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அலக்ஸ் ஹெல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 116 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இவருடன் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மோர்கன் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹெல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
நேற்றைய போட்டியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதுடன் இரு அணி வீரர்களும் பந்துவீசுவதற்கும் களத்தடுப்பிலும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கியதை காணக்கூடியதாக இருந்தது.





