தற்போதைய கடும் கொரொனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் பல உயிர்காக்கும் உபகரணங்கள் உட்பட அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு தேவையான உபகரணங்களும் மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நேரில் சென்று விடுத்திருந்த வேண்டுகோளிற்கிணங்க மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிர கொரொனா நோயாளிகளுக்கு தேவையான உயர் ஓட்ட நாசி ஒட்சிசன் கருவிகள் (HFNO), நோயாளர் கண்காணிப்பு கருவி (Monitors) மற்றும் செயற்கை சுவாச கருவிகள் (Ventilators) உட்பட பல கருவிகளும் உபகரணங்களும்,
கிடைக்கப்பட்டுள்ளமை தற்போதைய கடும் கொரொனா தொற்று நோயாளிகளுக்கான சேவைகளை வழங்க அத்தியாவசியமானதென மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்புகொண்ட போது, மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுக்கள் தொடர்ந்தும் தமது ஒத்துழைப்பை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள், சுற்றுநிருபங்களுக்கமைய கொரொனா நோயாளிகள் மற்றும்.
கொரொனா அல்லாத மற்றைய நோயாளிகளுக்கான சேவை வழங்கல் சீரான முறையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டுள்ள போதும், சுகாதார ஊழியர்களது வேலைப்பழு பலமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அர்ப்பணிப்பான சுகாதார ஊழியர்களின் பங்களிப்புடன், மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை தமது நாளாந்த கடமையாக கருதி செயற்படுவதே மேற்படி உபகரணங்களின் பெறுமதிக்கும் மேலான செயல் என குறிப்பிட்டார்.