நாடு முழுவதும் நாளை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!!

2050

தனிமைப்படுத்தல் ஊரடங்கு..

நாடு முழுவதும் நாளை(16.08) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தீர்மானம் தாக்கம் செலுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில்,பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.