இலங்கையில் மீண்டும் 160 ஐ தாண்டிய கொரோனா மரணங்கள் : இலங்கை முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு!!

1174

கொரோனா..

நாட்டில் நேற்று மேலும் 161 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,096 ஆக உயர்வடைந்துள்ளது. அதன்படி நாட்டின் கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை இன்று 6,000 ஐ கடந்துள்ளது.

இதேவேளை கடந்த மூன்று நாட்களாக இலங்கையில் 150க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன் நிலையில் நாளை (16.08) முதல் இரவு 10 மணிமுதல் அதிகாளை மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.