காய்கறி விற்கும் எம்எல்ஏவின் மனைவி : சொத்து மதிப்போ 2 கோடி!!

270


Veg

ஜார்கண்ட் மாநிலத்தில் எம்.எல்.ஏவின் மனைவி காய்கறி விற்று வருகிறார்.



ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்க கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோக்நாத் மகதோ.

இவரது மனைவி இன்றும் பார்காவோனில் உள்ள சந்தையில் காய்கறி விற்று வருகிறார். இதனால் மகதோவை ஏழை என்று யாரும் கூற முடியாது. அவருக்கு 2 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.



ஏற்கெனவே இத்தொகுதியில் லோக்நாத் மகதோ 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்திருக்கிறார். தொகுதியில் செல்வாக்குடன் இருக்கிறார்.எனினும், அவரது மனைவி முலானிதேவி, ஒரு நாளைக்கு காய்கறி விற்பதன் மூலம் குறைந்தது 200 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்றும் அவற்றில் வீட்டு செலவு போக, மீதியை சேமித்து வைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.



இவரது 2 மகன்களும் சுயதொழில் செய்து வருகின்றனர். இதனால் விவசாய கூலித் தொழிலாளர்களை வைத்து, தனது விவசாய நிலத்தில் உருளை கிழங்கு மற்றும் கோலிபிளவர் பயிரிட்டு முலானிதேவி விற்று வருகிறார்.


இதுகுறித்து லோக்நாத் கூறுகையில், என் மனைவி தன்னை கிராமத்து பெண்ணாகவே நினைத்து, விவசாய நிலத்தையும் மாடுகளையும் பராமரித்து வருகிறார்.

வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு, காய்கறிகளையும் விற்று வருகிறார், அவருக்கு அரசியலில் ஆர்வமில்லை. அவரது சேமிப்பு, மழைக் காலத்தில் உதவுவது போல, நான் தேர்தலில் போட்டியிடுவதற்கும் பயன்படுகிறது என்று மனைவியை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.