1900 – 2200 வரையுள்ள கிழமைகளை பார்க்காமல் சொல்லும் அதிசய சிறுவன்!!

318

Sriram

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன் 300 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறுகிறார்.

சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திர வித்யாலயத்தில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 1900ஆம் ஆண்டு முதல் 2200-ஆம் ஆண்டு வரையுள்ள நாள்களின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறார்.

இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராம் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி..

ஸ்ரீராம் பாலாஜி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறான். அவனுக்கு இந்தத் திறமை இருப்பது கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் எங்களுக்கு தெரியவந்தது. அப்போது 2000-ஆம் ஆண்டு முதல் 2038-ஆம் ஆண்டு வரையுள்ள 38 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறினான்.

பின்னர், கடந்த 2013ம் ஆண்டு 200 (1900-2100) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொன்னான். தற்போது 300 (1900-2200) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறான் என்றார்.

ஸ்ரீராம் பாலாஜி கூறுகையில், செல்போனில் உள்ள கலண்டரைப் பார்த்து திகதிகளுக்கான கிழமைகளை கற்றுக் கொண்டேன். தினமும் 3 மணி நேரம் வரை செல்போனில் உள்ள கலண்டர் பார்ப்பேன். தற்போது 300 ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்வேன் என்றார்.