வவுனியாவில் இந்திய வீட்டுத்திட்ட தெரிவு தொடர்பாக மக்கள் அதிருப்தி!!

857

வவுனியா, சாஸ்த்திரிகூழாங்குளம், சுந்தரபுரம் படிவம் – 02 கிராமத்தில் இந்திய வீடமைப்புத்திட்ட பயனாளிகள் தேர்வு முறையான முறையில் இடம்பெறவில்லை என தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களால் பிரதேச செயலகத்தில் ஆர்பாட்டங்களும், முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

பயனாளிகளின் தேர்வு அதிருப்தியானது எனவும், புதிதாக குடியமர்த்தப்படும் பகுதிகளுக்கு ஏதுவாக அமையக்கூடிய வகையில் கேள்விகளை கொண்ட பொதுவானதொரு வீட்டுத்திட்ட பயனாளிகளின் தேர்வுப் படிவமானது 14 வருட பழமையானதொரு கிராமத்தின் வறுமைக்குட்பட்டவர்களை தேர்ந்தெடுக்க ஏற்றதாக அமையவில்லை எனவும், இதன் காரணமாக வசதி வாய்ப்புக்கொண்டவர்கள் தேர்வில் இடம்பெறுவதும் வறுமைக்குட்பட்டவர்கள் மேலும் மன அழுத்தங்களுக்கு உள்ளாவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பிரதேச செயலாரிடம் தொடர்புகொண்டபோது இந்திய வீடமைப்புத் திட்ட தேர்வுப் படிவங்களானது, ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் அவர்களின் பணிப்பினிலேயே இப்படிவம் பதியப்பட்டது எனவும், இது ஒரு பொதுவான தேர்வுப் படிவமாகும் நீங்கள் கூறியவாறு இவ்வாறன கிராமத்திற்கு ஏற்றதாக அமையாமல் இருக்கலாம், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

01

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செயற்படும் நபர்கள் குறுகிய காலத்தில் நேரடியாக உரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியாது என்பதனை பிரதேச செயலாளர், அரச அதிபர், இந்திய வீட்டுத்திட்ட அமைப்பு, ஜனாதிபதி செயலகம் என்பன கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும், இல்லாதுவிடில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாதிக்கபட்ட மக்களாகிய நாங்கள் சாகும் வரையிலான உண்ணவிரதப் போராட்டத்தில் பங்கெடுப்போம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.

2