வவுனியாவில் கொரோனா தொற்றால் மூவர் மரணம்!!

2473

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றால் மூன்று பேர் நேற்று (19.08.2021) மரணமடைந்துள்ளனர். வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துளார்.

அத்துடன் பெரியார்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக வீட்டில் மரணமடைந்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியாவில் கொரோனா தொற்றால் நேற்று மாத்திரம் 3 பெண்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.