வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!!

4059

விபத்தில்..

வவுனியா புளியங்குளம் பகுதியில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (19.08.2021) ம.ரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதுவேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியிருந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்துள்ளார். சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 48 வயது குடும்பஸ்தரே ம.ரணமடைந்தவராவார்.