ஜெர்மனிய பெண் ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!!

559

Abuseஜெர்மனிய பெண் ஒருவரை கடத்தி பாலியல் ரீதியாக துன்பறுத்திய இளம் வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த ஜெர்மனிய பெண்ணும் நண்பர்களும் மது அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக மதுபோதையில் இருந்த குறித்த ஜெர்மனிய பெண்ணை, வர்த்தகர் தனது காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்பறுத்தியுள்ளார்.

அதிக மது போதையில் சுயநினைவற்றிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 27 வயதான பம்பலப்பிட்டியைச் சேர்ந்த செல்வந்த வர்த்தகர், குறித்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து வர்த்தகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு பல்கலைக்கலைக்கழகத்தில் கற்கை நெறியொன்றை பயின்று வரும் ஜெர்மனிய மாணவியே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.