வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு திருக.சந்திரகுலசிங்கம் அவர்களால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு!!(படங்கள்)

327

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு அமரர் சிவனாண்டி சண்முகம் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் நேற்று (27.03) வழங்கபட்டது. இதனை புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வழங்கிவைத்தார்.

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியில் கல்விகற்கும் சிறார்களின் கல்வியை மேலும் வளப்படுத்தும் நோக்கில் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கபட்டது. இன் நிகழ்வை பெற்றோர் சங்க உபதலைவர் திரு.க.வேலாயுதபிள்ளை அவர்கள் ஆரம்பித்து உரையாற்றிய போது முன்பள்ளியில் மாணவர் தொகை அதிகம் இருப்பதால் பிறிதொரு கட்டட தொகுதியில் இயங்கி வருகின்றதாகவும் போதியவசதிகள் இல்லாமையால் மாணவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலே தான் கல்வி கற்பதாகவும் தெரிவித்தார்.

புதிய கட்டட திற்காக பொருட்கள் கொள்வனவு செய்ய பட்ட போதிலும் அதை அமைப்பதற்கான முன்பள்ளியின் காணியில் காவல் நிலையம் அமைந்திருப்பதனால் கட்டடத்தை அமைக்க முடியாமல் உள்ளதாகவும் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நகரசபைக்கு தெரிவித்தபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய திருக.சந்திரகுலசிங்கம் (மோகன்) ,
அவர்கள் சிறார்கள் தமது அத்திவாரத்தை பலமுள்ளதாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்ற பெற்றோர்களும் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இது பெரிய உதவியாக கருதவில்லை இனி வரும் காலங்களில் என்னால் முடிந்த உதவிகளை மேற்கொள்வேன் என்றும் இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்றும் அவர்கள் தான் எதிர்காலத்தில் எமது சமூகத்தை சிறந்த முறையில் வழி நடத்தி செல்வார்கள் என்றும் தெரிவித்தார்.கிடைக்கின்ற வளங்களை மாணவ செல்வங்கள் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் பயன்படுத்தி தமது வளமான எதிர்காலத்தை நோக்கிய பயண பாதையில் செல்ல வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் முன்பள்ளியின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய கிராம சேவகர் திரு.விஜயரட்ணம் அவர்கள், திருக.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் முன்னாள் வவுனியா உப நகரபிதாவாக இருந்த போது வவுனியா நகரத்தில் பாரிய அபிவிருத்தி திடங்கள் முன் எடுக்கபட்டதாகவும் அவர்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், திருக.சந்திரகுலசிங்கம் அவர்கள் நகரசபையில் சேவை யாற்றும் பொழுது வவுனியாவில் நூல்நிலையம், பொதுப்பூங்கா, மைதானம், தமிழ் பெரியார் சிலைகள் என பல அபிவிருத்தி செயற்பாடுகள் நடை பெற்றதாகவும் இவர்களின் கட்சியின் ஊடாக வைத்தியசாலை கட்டிடம் அமைக்க பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய முன்பள்ளியின் சிரேஷ்ட ஆசிரியர் திருமதி.சி.ராகினி அவர்கள், திருக.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களுக்கு மாணவர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.

இவ் இவ் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திருக.சந்திரகுலசிங்கம், கிராம சேவகர் திரு.விஜயரட்ணம், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.பகீர்தினி,
புளொட் முக்கியஸ்தரும் கோயில்குளம் இளைஞர் கழக ஆலோசகருமான கண்ணதாசன், பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் ஆசிரியர்களான திருமதி.சி.ராகினி, திருமதி.ச.கேதிஸ்வரி, செல்வி.க.ரதி, திருமதி.ம.கிருபாசக்தி,கோயில்குளம் இளைஞர் கழக தொழில்நுட்ப பிரிவின் சதீஸ், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கல்வி அபிவிருத்தி குழுவின் இயக்குனர் செல்வம், கோயில்குளம் இளைஞர் கழக உறுப்பினர் சுகந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.

11121314