விசேட சோதனை..
வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் நடமாடுபவர்களை வழிமறித்து இராணுவத்தினரும், பொலிசாரும் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் அவர்களை எச்சரித்தும் அனுப்பி வருகின்றனர்.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு சடம்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு சட்ட நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் நடமாடுவோரை கட்டுப்படுத்த வவுனியா பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா பழைய பேரூந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளை அண்டி விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், வீதிகளால் செல்லும் வாகனங்களை வழிமறித்து சோதனை மேற்கொண்டு வருவதுடன் அத்தியாவசிய தேவையின்றி வீதிகளில் பயணிப்போரை எச்சரித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.