கொரோனா..
இலங்கையில் கொரோனாவுக்கு 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று வயது வித்தியாசம் பாராமல் உயிர்களைப் பலியெடுத்து வருகிறது.
இந்நிலையில் கொழும்பு நாவல பிரதேசத்தை சேர்ந்த 12 வயதேயான சிறுமி ஒருவரும் நேற்று கோவிட் தொற்றினால் பலியாகியுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.