தடுப்பூசிகள்..
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கு இராணுவத்தால் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசிகள் ஏற்றாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவத்தினரால் நடமாடும் சேவை ஊடாக வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வவுனியா நகரம், வவுனியா நகரம் வடக்கு, இறம்பைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 53 பேருக்கு அஸ்ரா செனக்கா கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.