கொரோனா தொற்றால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழப்பு!!

857

கொரோனா..

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கோவிட் தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் மேலும் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுவரை 27 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் 850 கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.