அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

1580

அரச ஊழியர்களின் சம்பளம்..

கோவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாக சர்ச்சை நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில் அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களிகளின் சம்பளத்தை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவையின் இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆகஸ்ட் மாத சம்பளத்தை கோவிட் – 19 நிதியத்திற்கு நன்கொடையாக அளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எனினும் இது அரசு துறையில் பணியாற்றுவோரின் ஊதியக் குறைப்புக்கான முயற்சியல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.