15 வயது சிறுமி..
புத்தளம் பகுதியில் 15 வயது சிறுமியொருவர் திடீரென உயிரிழந்த நிலையில் சிறுமிக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தளம், மணல்குன்று பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு இலக்கான குறித்த சிறுமி, கோவிட் சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய பின்னரே நேற்றுமுன் தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, உயிரிழந்த சிறுமியின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அச்சிறுமிக்கு கோவிட் தொற்று இருப்பது இரண்டாவது முறையாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சிறுமியின் சடலம் புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு கொண்டு செல்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.