அதிமுகவில் இணைந்த நடிகை ஆர்த்தி!!

374

Aarthi

தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை ஆர்த்தி நேற்று அதிமுகவில் இணைந்தார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்கனவே சில சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நடிகையும், சினிமா நகைச்சுவை நடிகையுமான ஆர்த்தி அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா முன்னிலையில் நேற்று கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழக மக்களிடம் இவருக்கு நல்ல பெயர் இருப்பதால் இவர் பிரச்சாரத்தில் குதிக்கலாம் என்று நம்பப்படுகிறது.