வவுனியா மாவட்டத்தில் 12-19 வயது பாடசாலை மாணவர்களின் திறமைக்கு அரியவாய்ப்பு!!

2181

அரியவாய்ப்பு..

2021ம் ஆண்டிற்கான இளம்கண்டுபிடிப்பாளருக்கான போட்டி(Junior Inventor of the Year). பெறுமதிமிக்க பணபரிசில்களும் அரிய வாய்ப்புக்களும் காத்திருக்கின்றன.

மேற்படி போட்டியானது இலங்கை கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் The Institution of Engineers, Sri Lanka (IESL) அமைப்பினால் 12 தொடக்கம் 19 வரை வயதுடைய பாடசாலை மாணவர்களின் ஆற்றல் மற்றும் புத்தாக்க திறனை (Creative and Innovative Thinking) மேம்படுத்தும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வழமையில் இல்லாத பொருட்களை, சாதனங்களை அல்லது எண்ணக் கருவை புதிதாக உற்பத்தி செய்தலைக் கண்டுபிடிப்பு எனலாம்.

இந்த ஆண்டு போட்டிக்கான விண்ணப்பங்கள் இணையத்தில் காணலாம் (https://iesl.lk/JIY_UIY/jiy/). அதில் போட்டி வழிகாட்டி, போட்டி நிலைமைகள் மற்றும் இணைய விண்ணப்பத்தின் இணைப்பு ஆகியவை உள்ளன.
(இணைய விண்ணப்ப காலக்கெடு: 31 ஆகஸ்ட் 2021).

போட்டியில் வெற்றியாளர்கள் முதலாவது பரிசாக “2021 ஆம் ஆண்டிற்கான இளம் கண்டுபிடிப்பாளர்” எனும் மதிப்பிற்குரிய பட்டம், ரூ. 20 000 பெறுமதியான பணப்பரிசில்.

தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், இரண்டாவது பரிசு ரூ. 17 500 பெறுமதியான பணப்பரிசில், வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் மூன்றாவது பரிசு ரூ. 15 000 பெறுமதியான பணப்பரிசில்
வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்,

மற்றும் மாகாணமட்டத்தில் கூடுதல் பரிசில்களும் தேசிய மட்டத்தில் வெவ்வேறு 7 பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்களுக்கு (1வது, 2வது & 3 வது) கூடுதல் பரிசில்களும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு

பொறியியலாளர்.சுதர்சன் – 0777729265
பொறியியலாளர்.திவாகர் – 0719700977