இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!!

3742

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுவது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (27.08.2021) முற்பகல் நடைபெற்ற கொவிட் – 19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்