ஒபாமாவிடம் கதறிய சவுதி மன்னரின் முன்னாள் மனைவி!!

291

Saudhi Arabia Princess

சவுதி மன்னரின் முன்னாள் மனைவி தனது மகள்களை மீட்டுத்தருமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபிய அரசர் அப்துல்லாவின் முன்னாள் மனைவி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

இவர் சவுதி அரேபிய அரண்மனையில் தனது 4 மகள்களும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மீட்டு தருமாறும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் விண்ணப்பித்துள்ளார்.

இதுகுறித்து ஊடங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த 13 வருட காலமாக தனது மகள்கள் சாஹர், மஹா,ஹலா, மற்றும் ஜவஹர் ஆகியோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தனது மகள்களுக்கு எதிரான உரிமை மீறல்களுக்கு தகுந்த நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.