‘உங்களை அறிவதற்கான சிறந்த வழி மற்றவர்களுக்கான சேவையில் உங்களைத் தொலைப்பதே’ என்று மகாத்மா காந்தி மிகச் சிறப்பாக கூறியிருக்கின்றார். கொரோனா பெருந்தொற்றின் பிடியில் நாடும் மொத்த உலகமும் மிக மோசமாக பீடிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் நாங்கள் ஒரு பொறுப்புள்ள குடிமக்களாக ஒன்றுகூடி இலங்கையில் பல தசாப்தங்களாக காணப்படுகின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதலும் மிக முக்கியமானதாகும். மேலும் நாட்டில் காணப்படும் அரசியல் கட்டமைப்பு காரணமாக மேற்படி பிரச்சனைகளில் காணப்படும் தாக்கத்தையும் களைவது எங்கள் கடமையாகும். இவ்வாறு பல தசாப்தங்களாக சாதாரண மனிதர்கள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகளைக் களைவதில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுவதுடன் மேற்படி காணப்படுகின்ற பிரச்சனைகளை மிகக் கடினமாக ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து அதன்மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினர் பயன்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணம் என நாங்கள் நம்புகின்றோம்.
இலங்கை ஒரு தேசமாக பன்மைத்துவம் கொண்ட ஒரு நாடாக அடையாளப்படுத்தப்பட முடியாதுள்ளது. பன்மைத்துவம் என்பது பல்வேறு தரப்பட்ட பின்புலங்கள் மற்றும் கலாசாரங்களைக் கொண்ட பல்வேறு மனிதர்களுடன் நாங்கள் எவ்வாறு அன்றாட தொடர்பாடல்களை மேற்கொண்டு சேர்ந்து வாழ்கின்றோம் என்பதாகும். பன்மைத்துவத்தில் ஈடுபடுவது என்பது எங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கிடையே எவ்வாறு வேறுபட்டவர்கள் என்பதை உணர முயற்சித்தல் ஆகும். இந்த சமூகவியல் கருத்தை அடிப்படையாகக் கொண்டு We Are One Sri Lanka ஆனது அவுஸ்திரேலிய சொலிசிட்டர் மற்றும் பரிஸ்டர் மற்றும் இலங்கை சட்டத்தரணி ஆகிய கலாநிதி செனரத் பண்டார சி சேனநாயக்க அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. இவர் ஒரு வங்கியியல் நிபுணரும் கிரிக்கெட் மீது மோகங் கொண்டவரும் ஆவார். இலங்கையில் காணப்படுகின்ற பல்வேறு சமூகங்களும் ஒரு தேசத்தவர்களாக சமாதானத்துடன் இன மத பாலியல் நாட்ட அரசியல் கருத்து உட்பட எந்தவொரு வேறுபாடும் இன்றி ஒன்றாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் We Are One Sri Lanka என்ற நிறுவனத்தை இவர் ஸ்தாபித்துள்ளார்.
மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்படும் நோக்கங்கள்
சமூகங்கள் இடையே சமூகங்களிடையேயான பலத்தை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் மற்றும் தேசிய மட்டங்களில் அடிப்படைத் தத்துவங்களான ஜனநாயகம் மற்றும் நீதியை மேம்படுத்துவதே We Are One Sri Lankaவின் நோக்கமாகும். இது பிரதானமாக நான்கு தலைப்புக்களில் விபரிக்கப்படலாம்.
ஒரு மொழி
ஆங்கிலத்தை இலங்கையில் பாவிக்கப்படுகின்ற பிரதான மொழியாக படிப்படியாக பிரபல்யப்படுத்துவதுடன் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை இணைப்பு மொழிகளாகப் பயன்படுத்துதல். அண்மையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் போன்ற சங்கங்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொண்டு இக் கொள்கையானது விவாதத்திற்கு உட்படுத்தக்கூடியது. எனினும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஏன் இந்த நடத்தை மாற்றம் அவசியமானது என்பதை உணருதல் முக்கியமானதாகும். இதனைச் செயற்படுத்துவதில் மிகப் பிரதானமான பிரச்சனையாக ஆசியர்களுக்கான பயிற்சிகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் குறிப்பிடக்கூடியதாக இருந்தபோதிலும் இதன்மூலம் கிடைக்கின்ற நன்மைகள் அதிகமானதாகும். முன்னேற நினைக்கும் எந்தவொரு நாட்டுக்கோ அல்லது தனி நபருக்கோ ஆங்கில மொழிப் புலமை விருத்தி என்பது முக்கியமானதாக காணப்படுவதுடன் சமயோசிதமாக சிந்திக்கக்கூடிய ஆற்றல்களை வளர்த்தல் எங்கள் எதிர்கால சந்ததி முன்னேற உதவும்.
ஒரே தேசிய இனம்
இலங்கைக் குடிமக்கள் யாவரும் இங்கையர்கள் என்று அடையாளங்காணப்படுகின்றனர். அரசியல் பரப்புரைகளால் தூண்டப்படும் கலகங்கள் பிரிவினவாதத்தால் ஏற்படும் மறை எண்ணங்கள் நாட்டில் குடிமக்களின் மனங்களில் ஆழப்பதிந்திருப்பதால் எங்கள் மனங்கள் பின்நோக்கிய சிந்தனையிலேயே காணப்படுகின்றது. இதன்மூலம் சிறுபான்மை சமூகத்தினரே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இது எமது சமூகங்களிடையே மோதல் போக்குகளை அதிகரிப்பதிலும் பங்காற்றுகின்றது. ஆகவே சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் சமூகங்களிடையே பச்சாபதாபம் காணப்படுவதை உறுதிப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. உறுதியான மாற்றங்களை நாங்கள் காண விரும்பினால் அதற்கான செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்பட்டு தொடர்ச்சியான விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும். பன்மைத்துவம் என்பது பாராட்டப்பட வேண்டியது தான் எனினும் அந்த பன்மைத்துவம் என்பது இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையேயான மோதல்களைத் துண்டும் கருவியாக இருத்தல் ஆகாது.
ஒரே சட்டம்
இலங்கையர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் இருத்தல் வேண்டும். சமூக அந்தஸ்து இன மத கலாசார தலையீடுகள் தாண்டிய அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டம் இருக்கும் பட்சத்திலேயே வெளிப்படைத்தன்மையான குறைகளற்ற ஒரு நீதி முறைமையை எமது நாட்டில் காணமுடியும். இலங்கையைப் பொறுத்தவரையில் நீதியைப் பெறுவதற்கான பாதை என்பது தடைகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. இது அநியாயம் இழைக்கப்படுகின்ற சமூகங்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமைவது இல்லை. எங்கள் செயற்றிட்டம் மூலமும் அறிவுரைகள் மூலமும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் இதனை அடைவதற்கு நாங்கள் உத்தேசித்துள்ளோம்.
ஒரே நாடு
இலங்கையின் இறையாண்மையைப் போற்றுதலையும் பாதுகாத்தலையும் இலக்காகக் கொண்டு நாங்கள் செயற்படுவோமாயின் அது நாட்டின் அரசியல் கட்டமைப்பில் முன்னேற்றத்திற்கு உதவுவதுடன் எங்கள் நாட்டிற்கும் நன்மை பயப்பவதாக அமையும். எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் இலங்கையர்கள் இது எங்கள் நாடு ஆகும்.
இந்த நான்கு தலைப்புகளுக்கு தொடர்ச்சியாக எங்கள் நிறுவனம் அடைவதற்காக 10 நோக்கங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
முக்கிய பத்து நோக்கங்கள்
01.புள்ளிவிபர மற்றும் விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கையை ஆட்சி செய்தல்.
02.இலங்கையில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் தொழிலதிபர்களை ஊக்குவித்தல் மற்றும் இலஞ்ச ஊழலை ஒழித்தல்.
03.சகல அரசியல்வாதிகளுக்கும் ஆகக் குறைந்த கல்வித் தகைமை மற்றும் ஓய்வூதிய வயதெல்லை என்பவற்றை வரையறை செய்தல்.
04.மாறுபட்ட பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளம் உள்ளடங்கலாக சகலருக்கும் சம உரிமைகள் வழங்கப்படுதல்.
05.மாட்டுக்கொலை விலங்குகளை வதைத்தல் மற்றும் கட்டாக்காலி நாய்கள் என்பவற்றை இல்லாதொழித்தல்.
06.கஞ்சா பாவனையை சட்டவிரோதமாக்குவதனைத் தவிர்ப்பதன் மூலம் நமது பிள்ளைகள் செயற்கை போதைப்பொருளுக்கு அடிமையாகுவதிலிருந்து பாதுகாத்தல்.
07.ஆறுகள் மழைக்காடுகள் கடற்கரைகள் மற்றும் அதிகம் விரும்பப்படும் வனவிலங்குகள் ஆகியவற்றுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
08.தேசிய கொள்ளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் குழந்தைப் பாலியல் வன்கொடுமையை ஒழிக்க செயற்படுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை விபச்சார விடுத தொழிலகங்களை விதிக்கு உட்படத்துவதன் மூலம் செயற்படுத்துதல்.
09.சகல மதகுருமார்களையும் அரசியல் கடமைப் பொறுப்பிலிருந்து விடுவித்தல்.
10.தொழில் வல்லுநர்களுக்கும் தனித்திறன் வாய்ந்த வேலையாட்களுக்கும் அவுஸ்திரேலியா கனடா அமெரிக்கா ஜப்பான் தென்னொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.