விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ..
கோவிட் தொற்று காரணமாக வவுனியா மாவட்டத்தில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நாட்டில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க கூடிய விற்றமின் சீ மற்றும் விற்றமிகன் டீ ஆகிய மாத்திரைகளை பயன்படுத்துமாறு சில மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் பலரும் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளை அதிகளில் கொள்வனவு செய்து வீடுகளுக்கு கொண்டு செல்வதனால் பல தனியார் மருந்தங்களில் விற்றமின் சீ மற்றும் விற்றமின் டீ ஆகிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் மருந்தகங்களுக்கு செல்லும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. அத்துடன், பரிசிட்டமோல் மருந்துக்கான கேள்வியும் அதிகரித்துள்ளமையால் சில மருந்தகங்களில் அதன் இருப்பு முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.