கொரோனா..
வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்களில் மூவர் நோய் தாக்கம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த மூவரும் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
அத்துடன், வீட்டில் மரணமடைந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் மேலும் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம், தோணிக்கல், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். சுகதாதார நடைமுறைளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்னளனர்.