சில்மிஷம் செய்த நபரை கன்னத்தில் அறைந்த நக்மா!!

303

Nagma

தவறாக நடக்க முயன்ற காங்கிரஸ் தொண்டரை நடிகை நக்மா தாக்கியுள்ளார்.

நடிகை நக்மா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். நடிகை என்பதால் அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடுகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் கூட்டத்தைப் பயன்படுத்தி சில விஷமிகள் சில்மிஷத்தில் ஈடுபடவும் முயற்சி செய்கிறார்கள். 2 நாட்களுக்கு முன் நக்மா பிரசாரத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜ்ராஜ் சர்மி திடீர் என்று நக்மா கன்னத்தில் முத்தமிட்டார். இது கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. நக்மா சமாளித்துக் கொண்டு பிரசாரத்தை தொடர்ந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் மீரட் நகரில் காங்கிரஸ் தொண்டர்களுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்.

நக்மா நடந்தே சென்றதால் தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அனைவரும் நக்மா அருகில் முண்டியடித்துச் சென்றனர். அப்போது ஒரு தொண்டர் கூட்டத்தைப் பயன்படுத்தி நக்மாவிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.

இதனால் நக்மா ஆவேசம் அடைந்தார். சில்மிஷம் செய்தது யார் என்று தெரியாத நிலையில் தனக்கு முன் இருந்த ஒரு தொண்டரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு காரில் ஏறிச் சென்று விட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், கூட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான் என்றாலும் இனி இது போன்ற சம்பவம் நடந்தால் மீரட்டுக்கு திரும்பவும் வரமாட்டேன் என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார்.