வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 9 பேர் மரணம்!!

1948

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் மரணமடைந்துள்ள நிலையில் ஓரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கல்குண்ணாமடு பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணும், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது ஆணும் கோவிட் தொற்று காரணமாக மரமணமடைந்துள்ளனர்.

இது தவிர கற்குளம், கோவில்குளம், உக்குளாங்குளம், கரப்பங்காடு, தோணிக்கல், கனகராயன்குளம், வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45, 71, 71, 53, 62, 60, 76 ஆகிய வயதுகளையுடைய 7 பேர் மரணமடைந்திருந்தனர்.

வவுனியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 9 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 பேர் மரணம்!!

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூன்று பேர் மரணமடைந்துள்ள நிலையில் ஓரே நாளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கற்குளம் படிவம் மூன்று பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த 45 வயது நபருக்கு பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்திருந்த கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா விடுதியில் சிகிச்சை பெறச்று வந்த உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதேவேளை முன்னதாக கரப்பங்காடு பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.

தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 62 வயது நபர், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது நபர், வைரவபுளியங்குளம் பபகுதியைச் சேர்ந்த 76 வயது நபர் ஆகியோரும் வீட்டில் மரணமடைந்திருந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததது.

இதன்படி வவுனியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.