சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நோய் ஆபத்து!!

1220

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நோய் ஆபத்து குறித்து குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இணைய வழி கற்கைகளில் ஈடுபடும் சிறார்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் gaming disorder என்னும் நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ உளநல மருத்துவர் ருமி ருப்டீன் இதனை தெரிவித்துள்ளார்.

அதிகளவான இளைஞர்களும் சிறார்களும் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

gaming disorder என்ற நோய் சிறுவர்களை மட்டும் பாதிப்பதல்ல எனவும் இளைஞர் ஏன் வயது வந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

gaming disorder என்னும் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் நோய் மெய்யானது எனவும் உலக ஸ்தாபனத்தின் நோய் பட்டியலில் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கோவிட் பெருந்தொற்று நிலைமை நீடித்து வருவதனால் மாணவர்கள் இணைய வழி கற்கையில் ஈடுபடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கைப்பேசி பயன்படுத்தாத சிறார்கள் தற்பொழுது கல்விக்காக அதனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 8 வயதுக்கும் மேற்பட்ட 24 வயது வரையிலானவர்கள் அதிகளவில் இந்த கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாதல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அநேகமான இந்த கேம்கள் கொலைகள் உள்ளிட்ட வன்முறைகளை தூண்டும் வகையிலனாது எனவும் இதில் வெற்றியீட்டுவோருக்கு சில வெகுமதிகளும் வழங்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட நேரம் கைப்பேசியில் கேம் விளையாடுவோர் இந்த பழக்க அடிமைத்துவத்தினால் பாதிக்கப்படுவதாகவும் இது பாரதூரமான நோய் நிலைமைகளை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் திடீர் நடத்தை மாற்றங்கள், அதிகளவில் கோபப்படுதல் போன்றவற்றுக்கு இந்த gaming disorder நோய் ஏதுவாகின்றது என டொக்டர் ருமி ருபன் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் தங்களை கேம் கதாபாத்திரங்களாக உருவகப்படுத்திக் கொண்டு அதேவிதமாக ஆடைகளை அணிந்து அந்த பாத்திரத்தின் குணவியல்புகளை பிரதிபலிக்க எத்தனிக்கின்றனர் எனவும் இது ஆபத்தான நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நோய்களினால் பாதிக்கப்படும் சிறார்கள் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

உளநல மருத்துவர்களின் ஆலோசனை வழிகாட்டல்களை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.