வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் மரணம் : இன்று மரணமடைந்தோர் 5 ஆக உயர்வு!!

2349

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று மாலை (29.08) மரணமடைந்துள்ளதுடன், இன்றைய தினம் (29.08) மரணமடைந்தோர் 5 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின்
கொரோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.

63 வயது ஆண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவார்.

இது தவிர, முன்னதாக இரணைஇலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், வவுனியா நகரப் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் என மூவர் மரணமடைந்தனர்.

இதன்படி 5 பேர் இன்றைய தினம் (29.08) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். குறித்த சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.