திருச்சி விமான நிலையத்தில் கொழும்பு பெண்கள் இருவர் கைது!!

649

Gold Barsஇலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.20 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொழும்பைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணை நடந்து வருகின்றது.

கொழும்புவிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீலங்கன் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் கொழும்பு நகரைச்சேர்ந்த அ. சித்திநூரியா (55) என்பவர் 650 கிராம் நகையையும், பாத்திமா சப்ரா (25) என்பவர் 550 கிராம் என மொத்தம் 1.20 கிலோ தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அவை அனைத்தும் 24 மற்றும் 22 காரட் தரத்தில் முற்றுப்பெறாத வகையில் செய்யப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட நகைகளாகும். அவற்றின் மொத்த மதிப்பு இந்திய ரூபாய் படி 33 லட்சமாகும்.