வவுனியா பூந்தோட்டம் மின் மயான திருத்தப்பணி தீவிரம் : மாலை வழமைக்கு திரும்பும் : நகரசபைத் தலைவர்!!

1406


பூந்தோட்டம் மின் மயானம்..



வவுனியா பூந்தோட்டம் மின் மயானம் இன்று (31.08) மாலை முதல் செயற்படக் கூடியதாக இருக்கும் என வவுனியா நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பூந்தோட்டம் பொது மயானத்தில் அமைந்துள்ள மின் வாயு தகன இயந்திரம் பழுதடைந்துள்ள நிலையில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



தற்போதைய நெருக்கடியான நிலையிலும் மக்களுக்கான சேவையினை துரிதமாக வழங்கும் பொருட்டு நகரசபையின் துரித நடவடிக்கை காரணமாக கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள குழு ஒன்று திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.




திருத்தப் பணிகள் மாலை நிறைவடையும் என நம்புகின்றேன். நிறைவடையும் பட்சத்தில் மாலை முதல் மீண்டும் கோவிட்டினால் உயரிழந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்ய முடியும். இது வரையில் ஐந்து சடலங்கள் தகனம் செய்யப்படாமல் உள்ளன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கோவிட்டின் காரணமாக இறப்பவர்களின் சடங்கள் இம் மயானத்திலேயே தகனம் செய்யப்படுவதனால் இதனை விரைவாக திருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் குறிப்பிட்டது போன்று, தற்போதும் கோவிட்டினால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யவதற்கான பணத்தினை நகரசபைக்கு செலுத்த முடியாதவர்கள்,

கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் உறுதிப்படுத்தலோடு வரும் பட்சத்தில் நகரசபை இலவசமாகவே வழங்கி வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.