வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவனும் மாணவியும் விசம் அருந்தி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

830

Emergencyவவுனியாவில்  பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட காதல் தகராறு காரணமாக நேற்று முன்தினம் விசம் அருந்தியுள்ளார்.

விசம் அருந்திய மாணவி தான் விசம் அருந்திய தகவலினை தொலைபேசியில் தனது காதலனாகிய தனது வகுப்பு உயர்தர மாணவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் காதலி மேல் உள்ள பாசத்தால் காதலி வீட்டுக்கு ஓடிச் சென்று காதலி குடித்த விசப் போத்தலை பறித்துச் சென்று அதில் இருந்த மிகுதி விசத்தினை தானும் அருந்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அறிந்து கொண்ட பெற்றோர் இருவரையும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



இதேவேளை குறித்த இரு காதல மாணவர்களும் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையில் பரீட்சை எழுத உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.