வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் நோயாளர் காவு வண்டி சாரதி ஆகியோருக்கு கொரோனா தொற்று!!

2080

கொரோனா..

வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கும், நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் தடிமன் மற்றும் இருமல் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்டி அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளல், தொற்றாளர்களை தனிமைப்படுத்தல், தொற்றாளர்களை கண்காணித்தல்,

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல், தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லல் உள்ளிட்ட கள வேலைகளில் ஈடுபட்ட வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதர் ஒருவரும், நோயாளர் காவு வண்டி சாரதியுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சுகாதார பரிசோதருக்கு சில மாதங்களுக்கு முன்னரும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்திருந்தமையும், இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.