வவுனியா தமிழ் மாமன்றத்தின் “இயல் விழா 2014″ வவுனியா நெற் இணையத்தினூடாக நேரடி ஒளிபரப்பு!!

636

TM

வவுனியா தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்தும் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கை கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

காலை 9 மணி தொடக்கம் 12.30 மணி வரை காலை அமர்வும், மாலை 4.00 மணி தொடக்கம் 8.30 மணி வரை மாலை அமர்வும் இடம்பெறவுள்ளது.

காலை அமர்விலே பாடசாலை மாணவர்கள் பங்கேற்று விவாதம் புரியும் விவாத அரங்கும், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும், சுழலும் சொற்போரும் இடம் பெறவுள்ளது. விவாத அரங்கினை தமிழ் ஆசிரியர் என்.கே.கஜரூபன் அவர்களும், சுழலும் சொற்போரினை, கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் அவர்களும் தலைமை தாங்கி சிறப்பிக்கவுள்ளனர்.



மாலை அமர்வில், கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையில், சிறப்பு பேச்சாளர்கள் பங்கு பெறும் பட்டி மன்றமும், தமிழ் மாமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் கவியரங்கும் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் வவுனியா நெற் இணையத்தினூடாக நேரடி ஒளிபரப்பு செயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.