இனம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குனர் என். லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
அன்புள்ள தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்.
இலங்கைத் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இனம் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டோம்.
இந்நிலையில் சில முரண்பாடான கருத்துக்கள் உருவானதை தொடர்ந்து இனம் திரைப்படத்தை தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், சில தமிழ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் திரையிட்டுக் காண்பித்தோம்.
படத்தை பார்த்த பிறகு தமிழ் நாடு திரைப்பட இயக்குணர்கள் சங்கமும், தமிழ் அமைப்பை சேர்ந்தவர்களும் கேட்டுக்கொண்டதன் படி கீழே குறிப்பிட்டுள்ள,
1. பள்ளிக்கூடக் காட்சி
2.புத்தமதத் துறவி தமிழ்க்குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி
3.சிங்கள ராணுவம் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி
4.தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம்
5.படத்தின் இறுதியில் காட்டப்படும் காட்டில் 38,000பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் என்கிற ஜந்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.